காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

 

 

காங்கிரஸ்  கட்சி  தலைவர்  சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கபட்டுள்ளார் எனவும் அவருக்கான சிகிச்சை நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைக்கு அவர் உடல்நிலைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் பல அரசியல் பிரபலங்கள் தொலைபேசி மூலம் சோனியா காந்தியின் உடல்நலம் குறித்து அவருடைய குடும்பத்தார்களிடம் விசாரித்து வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?