வெள்ளிக்கிழமை நகம் வெட்டலாமா?
வெள்ளிக்கிழமை நகம் வெட்டலாமா?
பொதுவாக செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகவும், சனிக்கிழமையை பெருமாளுக்கு உகந்த நாளாகவும்,
வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது அந்நாளில் நம் வீட்டில் உள்ள
பெரியவர்கள் மஹாலக்ஷ்மிக்காக விரதமும் இருப்பதுண்டு.
அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்க கூடாது என்பது நம்பிக்கை. தலைமுடி, நகம் இரண்டுமே வெட்டினாலும் மீண்டும் வளரும் என்றாலும் அது நம் உடலில் ஒரு அங்கமாகும். பணம் , பொருளை இழப்பதே தவறு என்றால் உடல் உறுப்பை இழப்பது இன்னும் அதிகபடியான தவறு அல்லவா? அதனால் தான் வெள்ளிக்கிழமை நகத்தை வெட்ட கூடாது என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள்.
இது நம்பிக்கையின் அடிப்படையில் உருவான பழக்கமே தவிர சாஸ்திரங்களின் அடிப்படையில் தோன்றியதல்ல.
Comments
Post a Comment